Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 05 செப்டம்பர் (ஹி.ச.)
மதுரையில் இருந்து குற்றாலத்தை நோக்கி சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற வேனும், தென்காசியில் இருந்து எதிர்திசையில் வந்த காரும் இலத்தூர் விலக்கு அருகே எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதின. மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் அடுத்த சில நொடிகளில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தன.
இந்த விபத்தில் காரில் இருந்த ஓட்டுநர் தீயில் சிக்கி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேனில் இருந்த சுற்றுலாப் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விபத்தில் காயமடைந்த 3 பேர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் நடுவே இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்ததால், அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
காவல்துறையினர் போக்குவரத்தைச் சீரமைத்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam