புட்காம் காட்டுப்பகுதியில் பயங்கரவாதி சுட்டுக்கொலை – பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி யாசிர் என அடையாளம் காணப்பட்டது
ஜம்மு காஷ்மீர், 05 செப்டம்பர் (ஹி.ச.) ஜம்மு-காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தின் ஆஷ்தார் கலி வனப்பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறித்த குறிப்பிட்ட உளவுத்தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, இந்திய ராணுவம், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ்
பயங்கரவாதி


ஜம்மு காஷ்மீர், 05 செப்டம்பர் (ஹி.ச.)

ஜம்மு-காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தின் ஆஷ்தார் கலி வனப்பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறித்த குறிப்பிட்ட உளவுத்தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, இந்திய ராணுவம், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) இணைந்து தேடுதல் மற்றும் சுற்றிவளைப்புப் பணியில் ஈடுபட்டன.

தேடுதல் நடவடிக்கையின்போது சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தை பாதுகாப்புப் படையினர் கவனித்து, பயங்கரவாதிகளை சரணடையுமாறு எச்சரித்தனர். அப்போது அவர்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதையடுத்து இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகவும் ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் தெரிவித்துள்ளது.

இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதுடன், ஏ.கே. ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் போர் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.

இந்த நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் ஆஷ்தார்’ (Operation Ashdar) என பெயரிடப்பட்டுள்ளது. ஆஷ்தார் கலி பகுதி அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால், அங்கு மேலும் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கிறார்களா என்பதை கண்டறிய பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சில தகவல்களின்படி, மேலும் 1 அல்லது 2 பயங்கரவாதிகள் அப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

இந்த மோதல், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல மாத இடைவெளிக்குப் பிறகு நடைபெற்ற முக்கியமான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக ஜூலை 8ஆம் தேதி, தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டம் சனாபோரா பகுதியில் நடைபெற்ற கூட்டு நடவடிக்கையில் லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த ஜாகிர் அகமது கனாய் என்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / VINOTH KUMAR P