இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று சென்னை வருகை - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச.) குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதன் ஒரு பகுதியாக, இதய வால்வு மற்றும் கட்டமைப்பு சார்ந்த இதய நோய்களுக்கான சிகிச்சை முறைகளை மே
Two key events in Chennai today featuring Vice President C.P. Radhakrishnan


சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச.)

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

அதன் ஒரு பகுதியாக, இதய வால்வு மற்றும் கட்டமைப்பு சார்ந்த இதய நோய்களுக்கான சிகிச்சை முறைகளை மேம்படுத்தும் நோக்கில் நடைபெறும் தேசிய அளவிலான கல்விக் கூட்டமான இந்தியா வால்வ்ஸ் 2026 நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள உள்ளார்.

சென்னை கிண்டியில் இன்று பகல் 3 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், இந்தியா வால்வ் பதிவேட்டை குடியரசு துணைத் தலைவர் தொடங்கி வைக்கிறார்.

இதய நோய் சிகிச்சையில் நவீன தொழில்நுட்பங்கள், மருத்துவ ஆராய்ச்சிகள் குறித்து நாடு முழுவதிலும் இருந்து வரும் முன்னணி இதய நிபுணர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

இதைத் தொடர்ந்து மாலை 4.30 மணி அளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் சிறப்பு விழாவிலும் துணைத் தலைவர் பங்கேற்கிறார்.

குடியரசு துணைத் தலைவரின் வருகையை முன்னிட்டு சென்னை மாநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு காரணங்களுக்காக நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, ட்ரோன் கேமராக்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b