Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச.)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மகளிர் அணி மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் ஷானு ஹனீஃப் தலைமையில் நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.
இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் அனிதா சுகுமார், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் அணி நிர்வாகிகள் ஹாரூன், ஷாரூக் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் மும்தாஜ் பேகம், சகானா பாத்திமா, ஷானு பானு, ஷர்மிலி பாத்திமா, சுமயா பாத்திமா, ஹாஜிரா பானு, நூர்ஜகான் உள்ளிட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
மேலும், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகளும் தி.மு.க.வில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த இணைப்பு நிகழ்ச்சியில், புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு தி.மு.க.வினர் வரவேற்பு தெரிவித்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ