சட்டப்பேரவை நிகழ்வுகளை காண ஆர்வம்,இது மக்கள் அரசியல்மயமாவதின் அறிகுறி - அமைச்சர் ராஜ்மோகன்
சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச) இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கும், பொருளாதார ஆதிக்கத்திற்கும் அஞ்சாமல், தாய்நாட்டின் விடுதலைக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தேசபக்தருமான, ''கப்பலோட்டிய தமிழன்'' வ.உ.
சட்டப்பேரவை நிகழ்வுகளை காண ஆர்வம் : இது மக்கள் அரசியல்மயமாவதின் அறிகுறி - அமைச்சர் ராஜ்மோகன்


சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச)

இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கும், பொருளாதார ஆதிக்கத்திற்கும் அஞ்சாமல், தாய்நாட்டின் விடுதலைக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தேசபக்தருமான, 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ. சிதம்பரனாரின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் வ.உ.சிதம்பரனார் திருவுருவப் படத்திற்கு தமிழக அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

செய்தியாளர்களிடம் அவர்,

தற்போது சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுக்க முழுக்க ஜனநாயகப் பூர்வமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

பள்ளிக் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் சட்டப்பேரவையில் நடைபெறும் விவாதங்களையும், நிகழ்வுகளையும் கண்டு களிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகவும், இது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு வலு சேர்ப்பதாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், முதலமைச்சர் விஜய் மீது நம்பிக்கை வைத்து நன்றி தெரிவித்த நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

நடிகர் அஜித்குமார் கூறியது போலவே, தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அத்துறை மேலும் மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் உறுதியளித்தார்.

Hindusthan Samachar / vidya.b