தவறான சிகிச்சையால் நாமக்கல் அருகே 7 வயது சிறுமி உயிரிழப்பு - மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
நாமக்கல், 06 செப்டம்பர் (ஹி.ச.) நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவி சுவிக்க்ஷா (7). இவருக்கு காலில் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக பரமத்தி வேலூரில் உள்ள தனியார் மருத்துவம
தவறான சிகிச்சையால் நாமக்கல் அருகே 7 வயது சிறுமி உயிரிழப்பு -  மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்


நாமக்கல், 06 செப்டம்பர் (ஹி.ச.)

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவி சுவிக்க்ஷா (7). இவருக்கு காலில் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்காக பரமத்தி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சிறுமி புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி சுவிக்க்ஷா பரிதாபமாக உயிரிழந்தார்.

சிறுமியின் இறப்புக்கு பரமத்தி வேலூர் தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான முதலுதவி சிகிச்சையே காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். முறையான சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதன் விளைவாகவே சிறுமி உயிரிழந்ததாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த உறவினர்கள் சிறுமியின் சடலத்துடன் வந்து பரமத்தி வேலூரில் உள்ள அந்த தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த அசம்பாவிதத்தைத் தொடர்ந்து, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b