கிராம சபைக்கு டாஸ்மாக் அதிகாரம் உட்பட 8 பரிந்துரைகள் - முதலமைச்சர் விஜய்க்கு கமல்ஹாசன் கடிதம்
சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் கிராம சபை கூட்டங்களை வலுப்படுத்துவது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் கிராம சப
8 recommendations for Gram Sabhas, including authority over TASMAC


சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் கிராம சபை கூட்டங்களை வலுப்படுத்துவது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் கிராம சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, கிராமப் பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறப்பது மற்றும் மூடுவது தொடர்பான இறுதி முடிவை எடுக்கும் அதிகாரத்தை கிராம சபைக்கே வழங்க வேண்டும் என்பது அவரது முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

மேலும், கிராம சபை கூட்டங்களை முறையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்துவது, கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிப்பது, நிதி ஒதுக்கீடு மற்றும் செலவினங்கள் குறித்த கணக்குகளை கிராம சபையில் சமர்ப்பிப்பதை கட்டாயமாக்குவது உள்ளிட்ட மொத்தம் எட்டு முக்கிய பரிந்துரைகளை கமல்ஹாசன் அந்தக் கடிதத்தில் முன்வைத்துள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரத்தை பரவலாக்குவதன் மூலமே உண்மையான மக்களாட்சியை உறுதி செய்ய முடியும் என்றும், இந்த பரிந்துரைகளை அரசு பரிசீலித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b