இதுதான் உங்கள் பொய்க்கால் குதிரை ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணமா? – அ.தி.மு.க ஐடி விங் கடும் விமர்சனம்
சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச.) காவல்துறை மானியக் கோரிக்கை தொடர்பான கேள்விகளுக்கு முதல்வர் நாளை சட்டப்பேரவையில் பதிலுரை அளிக்க உள்ள நிலையில், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து அதிமுக ஐடி விங் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது. இது
Admk head office


Bb


சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச.)

காவல்துறை மானியக் கோரிக்கை தொடர்பான கேள்விகளுக்கு முதல்வர் நாளை சட்டப்பேரவையில் பதிலுரை அளிக்க உள்ள நிலையில், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து அதிமுக ஐடி விங் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் தளப் பதிவில்,

காவல்துறை மானியக் கோரிக்கை தொடர்பான கேள்விகளுக்கு பதிலுரை அளிக்க இருக்கும் ரீல் முதல்வரே என்றும், இதுதான் உங்கள் பொய்க்கால் குதிரை ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம் என்றும் விமர்சித்துள்ளது.

மேலும், ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள அதிமுக ஐடி விங், அந்த கொலை சம்பவத்தின் காட்சிகளை முதல்வர் பார்த்தாரா என்று கேள்வி எழுப்பியுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் நெஞ்சம் பதைபதைக்கச் செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக இவ்வளவு சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், நாளை சட்டப்பேரவையில் வெறும் மனப்பாடம் செய்த வசனங்களை மட்டும் பேசப் போகிறீர்களா அல்லது சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறீர்களா என்றும் முதல்வரிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழக அரசு இனியும் காலதாமதம் செய்யாமல் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ள அதிமுக ஐடி விங், இப்பவாச்சும் வாயைத் திறந்து பேசுங்கள் சார் எனவும் தனது பதிவில் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ