Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச.)
ஆட்சி மாறியிருந்தாலும், தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என பாஜக தலைமைச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில்,
திமுக ஆட்சியில் நிலவிய சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, தற்போது தமிழக வெற்றிக் கழக ஆட்சியிலும் தொடர்வது வெட்கக்கேடானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையின் முக்கியமான மற்றும் பரபரப்பான பகுதிகளில் ஒன்றான அடையாறில் கொலை நடைபெற்றிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொலைக்கான காரணம் எதுவாக இருந்தாலும், குற்றம் நடைபெற்ற பிறகு நடவடிக்கை எடுப்பதைவிட, குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதே காவல்துறையின் முதன்மையான கடமையாக இருக்க வேண்டும் என்றும் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.
ரவுடிகளின் நடமாட்டத்தைக் கண்காணிப்பது, அவர்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து, அவர்களால் ஏற்படும் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே காவல்துறையின் திறனை மதிப்பிடுவதற்கான அளவுகோல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது தற்போது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தாத அளவுக்கு வழக்கமாகிவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
புதிய சகாப்தத்தை உருவாக்கிவிட்டதைப் போல தமிழக வெற்றிக் கழக அரசு பெருமை பேசுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
முதல்வர் ஜோசப் விஜய் விளம்பர அரசியலை ஒதுக்கிவிட்டு, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை மீண்டும் நிலைநாட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN