Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் வரை இயக்கப்படும் விரைவு ரயில் வரும் நாட்களில் தாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயில் (வண்டி எண் 16127) வழக்கமாக காலை 10.40 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும். இந்த ரயில் பாதையில் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் நடைபெற இருப்பதால், பயணிகளின் பாதுகாப்பு கருதி ரயில்களின் இயக்கத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் இந்த ரயில் வரும் 8, 9, 11, 15, 19, 22 மற்றும் 23 ஆகிய 7 நாட்களில் சுமார் 50 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் மட்டும் இந்த தாமதம் இருக்கும் என்றும், மற்ற நாட்களில் வழக்கமான நேரத்திலேயே ரயில் இயக்கப்படும் என்றும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த தேதிகளில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ள பயணிகள் தங்களது பயணத்தை அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளுமாறும், ரயில் நிலையத்திற்கு வரும் முன் ரயிலின் நேரத்தை உறுதி செய்து கொள்ளுமாறும் தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b