பீடி வாங்க பணம் தர மறுத்ததால் வடமாநில கட்டிடத் தொழிலாளி அடித்துக் கொலை – 12 ஆம் வகுப்பு மாணவர் உட்பட 4 பேர் கைது
சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை மதுரவாயல் அடுத்த நொளம்பூர், அபிஜித் பகுதியில் தங்கியிருந்து கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், போதையில் இருந்த சிலர் அவரிடம் பீடி வாங்குவதற்காக பணம் கேட்டதாக தெரிகிறது. அதற
கைது


சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை மதுரவாயல் அடுத்த நொளம்பூர்,

அபிஜித் பகுதியில் தங்கியிருந்து கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், போதையில் இருந்த சிலர் அவரிடம் பீடி வாங்குவதற்காக பணம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு அபிஜித் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த கும்பல் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த கும்பல் அபிஜித்தை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த நொளம்பூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த அபிஜித்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பணம் தர மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் அபிஜித் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam