தலைநகரிலேயே ஓட ஓட விரட்டி கொலை -சட்டம்-ஒழுங்கு குறித்து உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச.) நாளை காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் பதிலுரை அளிக்க உள்ள நிலையில், அவரது கட்சிப் பிரமுகர் ஒருவர் தலைநகரில் கொலை செய்யப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
உதயநிதி


சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச.)

நாளை காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் பதிலுரை அளிக்க உள்ள நிலையில், அவரது கட்சிப் பிரமுகர் ஒருவர் தலைநகரில் கொலை செய்யப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி ஆளும் த.வெ.க.வில் இணைந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி, சாலையில் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதுதான் தமிழ்நாட்டின் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தலைநகரிலேயே சாலையில் இதுபோன்ற கொலை நடைபெறும் அளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதை நினைத்து வருந்துவதா அல்லது சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் தஞ்சமடையும் இடமாக த.வெ.க. இருப்பதை நினைத்து வருந்துவதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கும் தி.மு.க.வை எப்படி குற்றம் சொல்லலாம் என யோசிப்பதை நிறுத்திவிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்” என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P