Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 06 செப்டம்பர் (ஹி.ச.)
திண்டுக்கல்லில் பொறியியல் படித்து வந்த மாணவர்கள் 8 பேர், கேரள மாநிலம் திருச்சூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் தாங்க முடியாத வேதனையை அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
சாலை ஓரத்தில் எதிர்பாராத விதமாக நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்னால் கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் (MoRTH) e-DAR இணையதளத் தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 5,13,474 சாலை விபத்துகளும், அவற்றில் 1,83,434 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
கார் வாங்கும்போதே மரணத்தை இலவச இணைப்பாக வாங்கிக்கொண்டிருக்கிறோம் என்று எண்ணும் அளவுக்குத்தான் நமது சாலைப் போக்குவரத்து உள்ளது என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
சாலை விபத்தில் உயிரிழந்த 8 மாணவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P