Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 06 செப்டம்பர் (ஹி.ச.)
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ள பயணிகளுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.
தற்போது ரெயில் பயணத்திற்கு 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால், நவம்பர் 5-ந்தேதி பயணம் செய்ய விரும்புவோர் இன்று காலை 8 மணி முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
நவம்பர் 6-ந்தேதி பயணத்திற்கான முன்பதிவு செப்டம்பர் 7-ந்தேதியும், நவம்பர் 7-ந்தேதி பயணத்திற்கான முன்பதிவு செப்டம்பர் 8-ந்தேதியும் தொடங்குகிறது.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் மற்றும் வந்தே பாரத் ரெயில்களில் பயணிக்க ஏராளமானோர் தயாராகி வருகின்றனர்.
தீபாவளி முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்பும் பயணத்திற்கான முன்பதிவும் அடுத்தடுத்த நாட்களில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் முன்கூட்டியே டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam