Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 06 செப்டம்பர் (ஹி.ச.)
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தற்பொழுது தொடங்கியுள்ளது.
இதில் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டுவதற்கான ஆலோசனை கூட்டம் என தகவல் கூறுகின்றனர்.
அதிமுகவின் மற்றொரு குழுவாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் எஸ் பி வேலுமணி, தங்கமணி, நத்தம் விசுவநாதன், சி வி சண்முகம் போன்றவர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் யாரும் மாவட்ட செயலாளர்கள் இல்லை.
இந்த நிலையில், ஈரோடு எஸ் கே சி சாலையில் அதிமுக பிரமுகரில் புதிய கட்டுமான அலுவலக திறப்பு விழாவிற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி திறந்து வைத்து இனிப்பு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்.
இதில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது போகாமல் புறக்கணித்து உள்ளீர்கள் என்ற கேள்விக்கு,
சிரித்தபடியே பதில் கூறாமல்
சென்றார்.
Hindusthan Samachar / ANANDHAN