Enter your Email Address to subscribe to our newsletters

ராமேஸ்வரம், 06 செப்டம்பர் (ஹி.ச.)
வங்கக்கடலில் நிலவி வரும் சீற்றம் காரணமாக கடலில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மீனவர்களின் பாதுகாப்பு கருதி இன்று முதல் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடல் சீற்றம் சீராகும் வரை மண்டபம் பகுதியைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி கடலுக்குச் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இந்த தடை உத்தரவு தொடரும் எனவும், மீனவர்கள் அனைவரும் வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து மீன்வளத்துறையின் அறிவுறுத்தலுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனால், மீனவர்களின் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் அந்தந்த துறைமுகங்களிலேயே பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / vidya.b