காவல்துறையினரின் வீரமும் தியாகமும் என்றும் போற்றத்தக்கது - காவலர் தினத்தையொட்டி முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து
சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச) 1859-ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்டக் காவல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை உருவாக்கப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் காவலர் நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காவல்துறையினர் அனைவ
Cm


Bb


சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச)

1859-ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்டக் காவல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை உருவாக்கப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் காவலர் நாள் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, காவல்துறையினர் அனைவருக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

சமூகத்தில் அமைதி நிலவிடவும், சட்டத்தின் ஆட்சி நிலைபெறவும் தன்னலமின்றிப் பணியாற்றிவரும் காவல்துறையினர் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த காவலர் நாள் நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் குற்றங்களைத் தடுப்பது, சட்டம்-ஒழுங்கைப் பேணுவது மட்டுமின்றி, ஆபத்தான சூழ்நிலைகள் மற்றும் பேரிடர் காலங்களிலும் மக்களின் உயிர், உடைமை மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதில் காவல்துறையினர் துணிவுடன் களப்பணியாற்றி வருவதாகவும், அவர்களின் வீரமும் தியாகமும் என்றும் போற்றத்தக்கவை என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையினரின் பணிச்சுமையைக் குறைத்து, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அவர்களின் பணித்திறனை மேம்படுத்தவும், காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை உறுதி செய்யவும் தமிழக அரசு முன்னுரிமை அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களும் காவல்துறையுடன் கரம் கோர்த்து, நம்பிக்கையுடனும் நல்லிணக்கத்துடனும் பயணித்து, அமைதியும் பாதுகாப்பும் நிறைந்த உன்னதத் தமிழ்நாட்டை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம் என முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ