Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை , 06 செப்டம்பர் (ஹி.ச.)
மராட்டிய மாநிலம் மும்பை சிட்டி மாவட்டம் தாராவி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
தாராவியில் 2 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், ஒரு வீட்டின் சமையல் அறையில் வைக்கப்பட்டிருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதனால் வீட்டில் தீப்பற்றி எரிந்தது.
இந்த விபத்தில் வீட்டில் இருந்த 2 குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போராடி தீயை அணைத்தனர். பின்னர், படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கியாஸ் சிலிண்டர் வெடித்ததற்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA