Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச.)
அகில இந்திய பார்வர்டு பிளாக் இயக்கத்தின் முக்கியத் தலைவரும், தென் தமிழக மக்களின் உரிமைகளுக்காக உறுதியுடன் குரல் கொடுத்தவருமான “உறங்காப்புலி” பி.கே. மூக்கையா தேவரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, அவரது பொதுவாழ்க்கையையும், மக்களுக்காகவும், கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகவும் அவர் ஆற்றிய பணிகளையும் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துவோம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மூக்கையா தேவர் கல்வியே சமூக முன்னேற்றத்திற்கான அடித்தளம் என்பதை உணர்ந்து செயல்பட்டவர் என்றும், பின்தங்கிய மக்களிடையே உயர்கல்வி வளர வேண்டும் என்ற நோக்கில் கள்ளர் கல்விக் கழகத்தை உருவாக்கியவர் என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் உசிலம்பட்டி, கமுதி, மேலநீலிதநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரிகள் உருவாக முக்கியப் பங்காற்றியவர் மூக்கையா தேவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் உரிமைகளுக்காகவும், கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகவும் மூக்கையா தேவர் ஆற்றிய பணிகள் என்றும் நினைவுகூரத்தக்கவை என நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ