விழுப்புரம் அருகே தந்தையை சுத்தியலால் அடித்துக் கொன்ற மகன் கைது - போலீசார் தீவிர விசாரணை
விழுப்புரம், 06 செப்டம்பர் (ஹி.ச.) விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆலங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசன் (வயது 50). இவருக்கும் இவரது மகன் அருண்குமாருக்கும் (வயது 24) இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
Son arrested for beating father to death with a hammer near Villupuram


விழுப்புரம், 06 செப்டம்பர் (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆலங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசன் (வயது 50). இவருக்கும் இவரது மகன் அருண்குமாருக்கும் (வயது 24) இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், மது போதையில் ஆத்திரமடைந்த மகன் அருண்குமார், தனது தந்தை அரசனை வீட்டில் இருந்த சுத்தியலால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த அரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தந்தையை கொலை செய்த மகன் அருண்குமாரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொலைக்கான சரியான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b