Enter your Email Address to subscribe to our newsletters

சூரத், 06 செப்டம்பர் (ஹி.ச.)
'சண்டேஸ் ஆன் சைக்கிள்' நிகழ்வின் 89-வது பதிப்பு, 'நஷா முக்த் யுவா ஃபார் விக்சித் பாரத் சங்கல்ப் அபியான்' என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் நடைபெற்று வரும் 100 வார ஜன் பாகிதாரி பிரச்சாரத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது.
விளையாட்டு, உடற்தகுதி, விழிப்புணர்வு மற்றும் சமூக பங்கேற்பு மூலம் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான இயக்கத்தை தொடர்ந்து முன்னெடுப்பதே இதன் நோக்கமாகும்.
அந்த வகையில் ஃபிட் இந்தியா இயக்கத்தின் 89-வது 'சண்டேஸ் ஆன் சைக்கிள்' நிகழ்வு இன்று சூரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, குஜராத் துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்கவியுடன் இணைந்து தலைமை தாங்கினார்.
'வளர்ந்த பாரதத்திற்கு போதைப்பொருள் இல்லா இளைஞர்கள்' (நஷா முக்த் யுவா ஃபார் விக்சித் பாரத்) என்ற கருப்பொருளை வலியுறுத்தி இந்த சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில்,
பிரதமர் நரேந்திர மோடியால் ஃபிட் இந்தியா இயக்கத்தின் கீழ் தொடங்கப்பட்ட 'சண்டேஸ் ஆன் சைக்கிள்' என்ற நாடு தழுவிய பிரச்சாரத்தில், நாடு முழுவதும் 25,000-க்கும் மேற்பட்ட இடங்களில் 50 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். போதைப்பொருள் இல்லாத வாழ்க்கை முறையை இளைஞர்களிடையே ஊக்குவிப்பதே இந்த முயற்சியின் நோக்கம்.
வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்று விரும்பும் எந்தவொரு நாட்டிற்கும் அதன் மக்கள் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். ஆரோக்கியமான மக்கள் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குகிறார்கள், ஆரோக்கியமான சமுதாயம் வளமான நாட்டை உருவாக்க உதவுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சூரத்தில் நடைபெற்ற இந்த சைக்கிள் பேரணி இன்று காலை 6 மணிக்கு மங்கத் சௌக் அருகே உள்ள சர்தார் படேல் சிலையிலிருந்து தொடங்கி, மினி பஜார் மற்றும் வராச்சா பிரதான சாலை வழியாகச் சென்று சர்தானா உயிரியல் பூங்காவில் நிறைவடைந்தது.
Hindusthan Samachar / vidya.b