சிறுவன் வயிற்றில் இருந்த 3 பிளேடு துண்டுகள் அகற்றம்
ஐதராபாத் , 06 செப்டம்பர் (ஹி.ச.) ஐதராபாத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவரது பெற்றோர், சிறுவனை அங்குள்ள உஸ்மானியா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சிறுவனுக்கு எக்ஸ்ரே
A


ஐதராபாத் , 06 செப்டம்பர் (ஹி.ச.)

ஐதராபாத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

இதையடுத்து அவரது பெற்றோர், சிறுவனை அங்குள்ள உஸ்மானியா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் சிறுவனுக்கு எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவரது வயிற்றில் 3 பிளேடு துண்டுகள் இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர்.

பின்னர் எண்டோஸ்கோபி மூலம் சிறுவனின் வயிற்றில் இருந்த 3 பிளேடு துண்டுகளையும் டாக்டர்கள் பத்திரமாக அகற்றினர்.

சிகிச்சைக்கு பிறகு சிறுவன் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மனநல பாதிப்பு இருப்பதாக கூறப்படும் அந்த சிறுவன், பிளேடு துண்டுகளை விழுங்கியிருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA