திருவான்மியூரில் த.வெ.க நிர்வாகி ஓட ஓட வெட்டி படுகொலை -5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை
சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை அடையாறு சாஸ்திரி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வண்ணத்துறை பகுதியில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கண்ணன் என்பவரை மர்ம நபர்கள் விரட்டி வெட்டி படுகொலை செய்தனர். இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவ
கொலை


சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை அடையாறு சாஸ்திரி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வண்ணத்துறை பகுதியில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கண்ணன் என்பவரை மர்ம நபர்கள் விரட்டி வெட்டி படுகொலை செய்தனர்.

இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட கண்ணன், ‘பி’ பிரிவு சரித்திரப் பதிவேடு குற்றவாளியாக இருந்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் மீது சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரண்டு கொலை வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கு தொடர்பாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அரசியலில் ஈடுபட்டதுடன் ரியல் எஸ்டேட் தொழிலிலும் கண்ணன் செயல்பட்டு வந்ததால், தொழில் போட்டி காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது பழைய வழக்குகளில் தொடர்புடையவர்களால் பழிவாங்கும் நோக்கில் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் இதுவரை 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam