அண்ணாமலையார் கோவிலில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாய் சுதர்சன் சாமி தரிசனம்
திருவண்ணாமலை, 06 செப்டம்பர் (ஹி.ச.) உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு நடிகர்கள், இயக்குனர்கள் தொழிலதிபர்கள், திரை
Sudharsan


திருவண்ணாமலை, 06 செப்டம்பர் (ஹி.ச.)

உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு நடிகர்கள், இயக்குனர்கள் தொழிலதிபர்கள், திரைப்பட பின்னணி பாடகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை தரிசித்து 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக சம்பந்த விநாயகரை வணங்கிய அவர் தொடர்ந்து உண்ணாமலையம்மன் உடனுறை அண்ணாமலையாரை வழிபாடு செய்தார்.

தொடர்ந்து நவகிரக சன்னதியிலும் வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் மூன்று முறை சுற்றி வந்து வணங்கி வழிபட்டனர், அதனைத் தொடர்ந்து கோவிலில் சார்பில் அவர்களுக்கு பிரசாதம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Hindusthan Samachar / ANANDHAN