Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச)
கடந்த 2009-ம் ஆண்டு சென்னை அடையாறு பகுதியில் சிவா என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலையை தற்போது கொல்லப்பட்ட த.வெ.க பிரமுகர் கண்ணன் தலைமையிலான கும்பல் தான் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு பிறகு சிவாவின் குடும்பத்தினர் கடும் விரக்தியில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், தனது சகோதரர் மகனான சிவாவின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில், சிவாவின் சித்தப்பா மகன் தலைமையிலான கும்பல் திட்டமிட்டு கண்ணனை நேற்று இரவு கொலை செய்தது தெரியவந்துள்ளது. நீண்ட நாட்களாக திட்டமிட்டு இந்த பழிவாங்கும் படுகொலையை அவர்கள் அரங்கேற்றியுள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த அவர்கள் ஆயுதங்களுடன் இருந்ததால், போலீசார் துப்பாக்கி முனையில் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b