Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 06 செப்டம்பர் (ஹி.ச.)
ஆன்லைன் வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டு வரும் சிறு வணிகர்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாகச் சிறப்புப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது,
வணிகர்கள் கடையை மீண்டும் புதுப்பித்து அதே வணிகருக்கு தர வேண்டும்,வாரை சந்தை அனுமதி பெறாமல் சாலையோரம் கடை அமைப்பது தனி நபர் கடை அமைப்பது தடுக்க வேண்டும் என முதல்வரிடம் மனு அளிக்க உள்ளோம்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆன்லைன் வர்த்தகப் பெருக்கத்தால் சிறு வணிகர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆன்லைன் கலாச்சாரம் இல்லத்தரசிகளை வீடுகளிலேயே முடக்கி, அவர்களுக்கு பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் மற்றும் நோய்கள் ஏற்படக்கூடிய அவல நிலைக்குத் தள்ளியுள்ளது.
நிலையை மாற்ற ஆன்லைன் வர்த்தக அமைப்பில் மத்திய அரசு பல சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்.
சரக்குக் போக்குவரத்தைப் பாதிக்கும் சுங்கச் சாவடி கட்டணங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றால் மட்டுமே நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி கணிசமாகக் குறையும்.
வணிக நிறுவனங்களில் தமிழிலேயே பெயர் பலகைகள் அமைப்பதிலும், பிற சொற்களைத் தமிழாக்கம் செய்வதிலும் வணிகர் பேரமைப்பு எவ்வித மாற்றமும் இன்றி முழு முயற்சியுடன் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN