கோவை அமுதன், திருவொற்றியூர் தனுஷ் கொலை வழக்குகளில் 36 பேர் கைது - முதல்வர் விஜய் விளக்கம்
சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.) தமிழகத்தை உலுக்கிய கோவை அமுதன் மற்றும் திருவொற்றியூர் தனுஷ் ஆகிய இரு மாணவர்களின் கொலை வழக்குகள், தற்போதைய அரசியல் மற்றும் சமூக விவாதங்களில் மிக முக்கியமான விவகாரங்களாக மாறியுள்ளன. இந்த கொலை வழக்குகள் தொடர்பாக இது
கட்சி நிதி என்ற பெயரில் 10 சதவீதம் வரை லஞ்சம் - கடந்த ஆட்சி மீது முதல்வர் விஜய் குற்றச்சாட்டு


சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழகத்தை உலுக்கிய கோவை அமுதன் மற்றும் திருவொற்றியூர் தனுஷ் ஆகிய இரு மாணவர்களின் கொலை வழக்குகள், தற்போதைய அரசியல் மற்றும் சமூக விவாதங்களில் மிக முக்கியமான விவகாரங்களாக மாறியுள்ளன.

இந்த கொலை வழக்குகள் தொடர்பாக இதுவரை 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இது குறித்து பேசிய முதல்வர் விஜய் , மாணவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கக்கூடியது என்றும், இந்த சம்பவம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

மேலும், இந்த இரு கொலை வழக்குகளிலும் குற்றச்செயலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் 36 பேரும் எந்தவித தாமதமும் இன்றி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டம் தனது கடமையை சமரசமின்றி, உறுதியாக செய்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதில் அரசு உறுதியாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

இளம் மாணவர்கள் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதும், அவர்களை நல்வழிப்படுத்துவதும் அரசின் முக்கிய பொறுப்பு என்றும், அதற்கான வழிகாட்டுதல்களை அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் முதல்வர் விஜய் தனது உரையில் வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / vidya.b