Enter your Email Address to subscribe to our newsletters

திருமலை , 07 செப்டம்பர் (ஹி.ச.)
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
விடுமுறை மற்றும் விழாக்காலங்களில் பக்தர்களின் வருகை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 84 ஆயிரத்து 176 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும், 36 ஆயிரத்து 673 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
அன்றைய தினம் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை எண்ணியதில், ரூ.4 கோடியே 8 லட்சம் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்துக்கு சென்ற பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு சுமார் 24 மணி நேரம் வரை காத்திருந்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால், திருமலையில் தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தரிசன ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA