Enter your Email Address to subscribe to our newsletters

சித்தூர் , 07 செப்டம்பர் (ஹி.ச.)
சித்தூர் மாவட்டம் கங்காதர நெல்லூர் மண்டலம் பெத்தகால்வா கிராமத்தைச் சேர்ந்த தெலுங்குதேசம் கட்சியின் மூத்த நிர்வாகி செருகூரி வசந்த் குமார் சமீபத்தில் மரணம் அடைந்தார்.
இதையடுத்து, அவரது குடும்பத்தினரை ஆந்திர மாநில அமைச்சர் நாரா லோகேஷ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதற்காக பெத்தகால்வா கிராமத்தில் உள்ள வசந்த் குமாரின் வீட்டுக்கு சென்ற நாரா லோகேஷ், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர், வசந்த் குமாரின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அப்போது, தெலுங்குதேசம் கட்சிக்காக வசந்த் குமார் ஆற்றிய பணிகளை நாரா லோகேஷ் நினைவுகூர்ந்தார். அவரது மறைவு கட்சிக்கும், குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று தெரிவித்தார்.
மேலும், வசந்த் குமார் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த நாரா லோகேஷ், அவர்களுக்கு தெலுங்குதேசம் கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும், தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் விவரங்களை நாரா லோகேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA