தி.மு.க-வை அவையை விட்டு வெளியேறச் செய்யாமல் தர்ணா செய்ய வைத்த நிகழ்ச்சி வரவேற்கத்தக்கது - தமிழிசை பேட்டி
காஞ்சிபுரம், 07 செப்டம்பர் (ஹி.ச.) காஞ்சிபுரம் முன்னாள் சேர்மன் கே.டி.எஸ். மணியின் நூறாவது பிறந்த நாளையொட்டி, இந்து கல்வி அறக்கட்டளை சார்பில் காஞ்சிபுரத்தில் 11 ஏழை, எளிய ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைத்து, அவர்களுக்குத் தேவையான சீர்வரிசை வழங்கு
Tamilisai Soundararajan


காஞ்சிபுரம், 07 செப்டம்பர் (ஹி.ச.)

காஞ்சிபுரம் முன்னாள் சேர்மன் கே.டி.எஸ். மணியின் நூறாவது பிறந்த நாளையொட்டி, இந்து கல்வி அறக்கட்டளை சார்பில் காஞ்சிபுரத்தில் 11 ஏழை, எளிய ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைத்து, அவர்களுக்குத் தேவையான சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி, அறக்கட்டளைத் தலைவர் அருண்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் புதுச்சேரி முன்னாள் ஆளுநரும், பாஜக முன்னாள் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று, மணமக்களுக்கு மாங்கல்யம் எடுத்து வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இன்று சட்டப் பேரவையில் கடந்த கால ஆட்சியின் ஊழல்களை வெளிப்படைத்தன்மையுடன் வெளிப்படுத்தி, திமுகவை அவையை விட்டு வெளியேறச் செய்யாமல் தர்ணா செய்ய வைத்த நிகழ்ச்சி வரவேற்கத்தக்கது.

இதனை முதல்வர் விஜய் செய்ததற்கு அவருக்கு வாழ்த்துகள் தெரிவிப்பதாகவும், தொடர்ந்து இனிவரும் காலத்தில் எந்த அரசியல்வாதிகள் ஊழல் செய்தாலும் அது நிச்சயம் வெளிவந்துவிடும் என்ற அச்சத்தை இது உருவாக்கியுள்ளது என்றார்.

மேலும், ஊழல் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் இதனை மேற்கொண்ட முதல்வருக்கு வாழ்த்துகள் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

Hindusthan Samachar / ANANDHAN