பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? -முதலமைச்சர் மீது உதயநிதி விமர்சனம்
சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.) சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய், வீராணம் டெண்டருக்கு திமுக கையூட்டு பெற்றதாக குற்றம்சாட்டினார். இதகுறித்து பேசிய அவர், “கலைஞர் மீது எனக்கு பெரிய மதிப்பு மரியாதை உண்டு. நான் அவர் மீது எந்த குற்றச்சாட்டையும் வை
Udhayanidhi Stalin


சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.)

சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய், வீராணம் டெண்டருக்கு திமுக கையூட்டு பெற்றதாக குற்றம்சாட்டினார்.

இதகுறித்து பேசிய அவர், “கலைஞர் மீது எனக்கு பெரிய மதிப்பு மரியாதை உண்டு. நான் அவர் மீது எந்த குற்றச்சாட்டையும் வைக்கவில்லை, அறிக்கையில் இருப்பதை தான் சொல்கிறேன். லோனுக்கு இஎம்ஐ கட்ற மாதிரி இன்ஸ்டால்மெண்ட்ல வாங்கி இருக்காங்க. இந்த 29 லட்சம் மட்டும் இல்ல. முரசொலி கட்டடம் கற்றதுக்காக எல்லாம் கொடுத்திருக்காங்க. காசா குடுத்துருக்காங்க.. பொருளாக வாங்கி கொடுத்திருக்காங்க..

மிஸ்டர் கிளீன், மிஸ்டர் கிளீன் என சொல்லிக் கொள்கிறார்களே.. அப்பவே அப்படி என்றால், இப்போது எப்படி இருக்கும். 7.5% முதல் 10% வரை பார்ட்டி பண்ட் வாங்கப்பட்டதாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. செய்கின்ற தப்பையே முறையாகவும் ஒழுங்காகவும் செய்து உள்ளார்கள்.

அமலாக்கத்துறையின் இரண்டு துறை file ஓபன் செய்ததற்கு இப்படி இருக்கிறது என்றால், மற்ற துறையை file ஓபன் செய்தால் எத்தனை பூதம் கிளம்பி வரும் என்று தெரியவில்லை. ஆதாரம் வேண்டும்.. ஆதாரம் வேண்டும் என்றீர்கள்.. போதுமா ஆதாரம்.

தப்பு செய்துவிட்டு மாட்டிக்கிறவர்கள் ஒரு பக்கம். அந்த தப்பிலிருந்து எப்படியெல்லாம் தப்பிக்கலாம் என்று யோசித்து வைத்துவிட்டு மாட்டிகாதவர்கள் இன்னொரு பக்கம். நமது தோழர்கள் எல்லாம் இரண்டாவது கேட்டகிரி.

திமுக மேடையில் பேசும்பொழுது பெருமையாக ஒன்று கூறுவார்கள். திமுக இருக்கின்ற இடத்தில் தப்பு நடக்காது.. தப்பு நடக்கின்ற இடத்தில் திமுக இருக்காது என்று கூறுவார்கள்.

நான் அதை மாற்றிக்கூறுகிறேன். திமுக இருக்கின்ற இடத்தில் தப்பு நடக்கும், தப்பு நடக்கிற இடத்தில்தான் திமுக இருக்கும். ஊழல் என்று சொல்லிவிட்டால் போதும் அனைவரும் எழுந்து நின்று ஆதாரம் கொடு என கேட்பார்கள்.

ஆனால் இதுவரை நாங்கள் ஊழல் செய்தது இல்லை எனக் கூற மாட்டார்கள். ஊழல் செய்பவர்கள்தான் ஆதாரம் கேட்பார்கள், ஊழல் செய்யாதவர்கள் அதைப் பற்றி கண்டுக்கொள்ளவே மாட்டார்கள்” என கொந்தளித்து பேசினார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்,

அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?

பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.

எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better! என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN