கட்சி நிதி என்ற பெயரில் 10 சதவீதம் வரை லஞ்சம் - கடந்த ஆட்சி மீது முதல்வர் விஜய் குற்றச்சாட்டு
சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச) கடந்த ஆட்சிக் காலத்தில் கட்சி நிதி வசூலிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் விஜய் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சட்டப்பேரவை விவாதத்தில் பேசிய அவர், கடந்த ஆட்சியில்
கட்சி நிதி என்ற பெயரில் 10 சதவீதம் வரை லஞ்சம் - கடந்த ஆட்சி மீது முதல்வர் விஜய் குற்றச்சாட்டு


சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச)

கடந்த ஆட்சிக் காலத்தில் கட்சி நிதி வசூலிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் விஜய் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சட்டப்பேரவை விவாதத்தில் பேசிய அவர், கடந்த ஆட்சியில் ஒப்பந்தப் பணிகள் மற்றும் அரசு திட்டங்களில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்சி நிதி என்ற பெயரில் லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் முக்கிய நபர்களாக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் செயல்பட்டதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளதாக அவர் சபையில் தெரிவித்தார்.

மேலும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி இந்த கட்சி நிதி வசூல் நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்தார் என அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளதாகவும் முதல்வர் விஜய் கூறினார்.

இது தொடர்பான அனைத்து ஆதாரங்களும் தன்னிடம் உள்ளதாகவும், உரிய நேரத்தில் அவை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்ததால் சட்டப்பேரவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

Hindusthan Samachar / vidya.b