Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னையில் நடைபெற்ற திமுக கட்சியின் பொன்விழா மற்றும் பவள விழா மேடையில் சர்க்காரியா கமிஷன் விசாரணை அறிக்கையின் முக்கிய அம்சங்களை வாசித்துக் காட்டி முதலமைச்சர் விஜய் இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
வரலாற்று சிறப்பு மிக்க வீராணம் குடிநீர் திட்ட டெண்டரில் முறைகேடு நடந்ததாகவும், அதற்காக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மருமகனான மாறன் 2.5 சதவீதம் கமிஷன் கேட்டதாகவும் சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளதை முதலமைச்சர் விஜய் சுட்டிக்காட்டினார்.
மேலும் இந்த ஒப்பந்தத்திற்காக 1974-ம் ஆண்டு வரை ஏழு தவணைகளாக மொத்தம் 29 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரத்தை அவர் வாசித்தார்.
வீராணம் திட்ட ஒப்பந்தத்தை சத்யநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்திற்கு வழங்குவதற்காக அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாகவும், இந்த ஒப்பந்தத்தை குறிப்பிட்ட நிறுவனத்திற்கே வழங்க வேண்டும் என்பதற்காக பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரை கட்டாயப்படுத்தியதாகவும் சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும், முந்தைய அதிமுக அரசு கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை திட்டமிட்டு ரத்து செய்து வருவதாக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்த விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை கூட திமுக அரசு முறையாக செயல்படுத்தவில்லை என்று சாடினார். தேர்தல் வருகிறது என்பதற்காக, தேர்தலுக்கு நான்கு நாட்கள் இருக்கும்போது அவசர அவசரமாக அந்த திட்டத்தை பெயரளவுக்கு செயல்படுத்தி கண் துடைப்பு நாடகம் நடத்தியதாகவும் அவர் விமர்சித்தார்.
மேலும், ஏழை எளிய பெண்களின் திருமணத்திற்கு பேருதவியாக இருந்த தாலிக்கு தங்கம் திட்டம், கொரோனா காலத்தில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மக்களுக்கு உடனடி மருத்துவ வசதி அளித்த அம்மா மினி கிளினிக் திட்டம் போன்ற மகத்தான திட்டங்களை எந்தவித மாற்று ஏற்பாடும் இன்றி திமுக அரசு ரத்து செய்துவிட்டதாகவும் விஜய் குற்றம் சாட்டினார்.
இது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சம் என்றும், ஒரு கட்சியின் திட்டம் என்பதற்காக மக்கள் நலனை புறக்கணிப்பது ஆரோக்கியமான அரசியல் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b