Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 07 செப்டம்பர் (ஹி.ச.)
மாநிலத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றம் என்பது குடிமக்களின் பாதுகாப்பில் தான் அடங்கியிருக்கிறது என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து முதல்வர் விஜய் பேசினார்.
அப்போது பேசிய அவர், இந்த அரசை பொறுத்தவரை சட்டத்தின் முன் அனைவரும் சமம். குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும், அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் மீது தயவு தாட்சண்யமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே இந்த அரசின் அசைக்க முடியாத நிலைப்பாடு என்று குறிப்பிட்டார்.
மேலும், எதிர்க்கட்சிகள் கூறும் கருத்துக்கள் உள்நோக்கம் கொண்டதாக இருந்தாலும் கூட, அதில் உள்ள நியாயமான அம்சங்களை அரசு புறக்கணிக்காது என்றும், அதில் பாகுபாடு பார்க்காமல் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு குறித்து பேசிய முதல்வர், ஓரிரு குற்றச் சம்பவங்கள் நடைபெற்று விட்டது என்பதற்காகவே ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது என்று குறை கூறி விட முடியாது என்றும், காவல்துறை மிகவும் துரிதமாகவும், திறமையாகவும் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து வருவதாகவும் விளக்கமளித்தார்.
Hindusthan Samachar / vidya.b