தி.மு.க- வினர் தப்பைக் கூட விஞ்ஞான முறையில் செய்வதில் வல்லவர்கள் - முதல்வர் விஜய் காட்டம்
சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.) சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் ஆற்றிய உரை தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசின் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கிய அவர், ஆட்சி நிர்வாகத்தில் நடந்துள்ள முறைகேடுகளை ஆதாரங்களுட
CM Vijay speaks in the Assembly


சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.)

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் ஆற்றிய உரை தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசின் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கிய அவர், ஆட்சி நிர்வாகத்தில் நடந்துள்ள முறைகேடுகளை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார்.

திமுகவினர் செய்யும் தப்பைக் கூட சரியாக, ஒழுங்காக, விஞ்ஞான முறையில் செய்துள்ளனர். அந்த அளவிற்கு திட்டமிட்டு முறைகேடுகள் அரங்கேறியுள்ளன என்று முதல்வர் விஜய் சாடினார்.

கடந்த ஆட்சியில் இரண்டு துறைகளின் கோப்புகளைத் திறந்து பார்த்ததற்கே இவ்வளவு பெரிய ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன என்றும், இன்னும் அனைத்துத் துறைகளின் கோப்புகளையும் திறந்தால் எத்தனை பூதங்கள் வெளியே வருமோ தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக இருக்கும் இடத்தில்தான் தப்பு இருக்கும், தப்பு நடக்கும் இடத்தில்தான் திமுக இருக்கும் என்ற நிலை உருவாகிவிட்டது. நாம் ஊழலை சுட்டிக்காட்டினால், 'ஆதாரம் கொடு' என்று கேட்கிறார்கள். ஆனால், இதுவரை ஒருமுறை கூட 'நாங்கள் ஊழல் செய்யவில்லை' என்று தைரியமாகச் சொல்ல மாட்டார்கள். அதுவே அவர்களின் குற்றத்தை உறுதி செய்கிறது என்று கடுமையாக விமர்சித்தார்.

மேலும், தனது அரசியல் பயணம் குறித்து பேசிய முதல்வர் விஜய், அண்ணா, எம்ஜிஆர், என்டிஆர் வழியில் வந்தவன் நான்.

இறைவனும், மக்களும் என்றென்றும் நம் பக்கம்தான் நிற்பார்கள்.

நான் இந்த முதல்வர் நாற்காலிக்காகவோ, அதிகாரத்திற்காகவோ இந்த இடத்திற்கு வரவில்லை.

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத்தான் வந்திருக்கிறேன் என்று உருக்கமாக தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b