பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை முழு ஆய்வுக் கூட்டம்
புதுடெல்லி, 07 செப்டம்பர் (ஹி.ச.) புதுடெல்லியில் உள்ள 7 லோக் கல்யாண் மார்க் பிரதமர் இல்லத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவையின் முக்கிய ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மத்திய கேபினட் அமைச்சர்கள், த
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை முழு ஆய்வுக் கூட்டம்


புதுடெல்லி, 07 செப்டம்பர் (ஹி.ச.)

புதுடெல்லியில் உள்ள 7 லோக் கல்யாண் மார்க் பிரதமர் இல்லத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவையின் முக்கிய ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் மத்திய கேபினட் அமைச்சர்கள், தனிப் பொறுப்பு வகிக்கும் இணை அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தின் முக்கிய நோக்கம் பாஜக தலைமையிலான மத்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்குகள் எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை மதிப்பீடு செய்வதாகும்.

ஒவ்வொரு அமைச்சகத்தின் செயல்திறன், திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள வேகம் மற்றும் தரம் குறித்து பிரதமர் நேரடியாக ஆய்வு செய்ய உள்ளார்.

மேலும், மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள், சமூக நீதி சார்ந்த திட்டங்கள் நாட்டின் கடைக்கோடியில் உள்ள ஏழை எளிய மக்களை முழுமையாக சென்றடைந்துள்ளதா என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் உள்ள தடைகளை களைவது மற்றும் வரும் நாட்களில் அரசின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பிரதமர் அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b