தங்கம் வெள்ளி விலை சற்றே குறைந்ததால் நகை பிரியர்கள் உற்சாகம்
சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.) தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை மாத கடைசியில் தொடர் சரிவை கண்டது. அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் மாதமும் ஏற்ற இறக்கமாக இருந்து
தங்கம்


சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.)

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை மாத கடைசியில் தொடர் சரிவை கண்டது.

அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் மாதமும் ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், செப்டம்பர் 5ஆம் தேதி நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 குறைந்து ஒரு கிராம் ரூ.14,190க்கும் சவரனுக்கு ரூ.1,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,520க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

அந்த வகையில், இன்று கிராம் ஒன்றுக்கு 60 ரூபாய் குறைந்து 14,130 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 1,13,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளியும் விலை மாற்றமின்றி கிராம் ஒன்று 255 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P