Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 07 செப்டம்பர் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் மேலூரில் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை உடனடியாக திறக்க வேண்டும், விவசாயிகள் மீதான அனைத்து கடன்களையும் எந்தவித நிபந்தனையும் இன்றி முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் கவன ஈர்ப்பு ஊர்வலம் நடத்தினர்.
பென்னிகுயிக் பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஊர்வலத்திற்கு சங்கத் தலைவர் குறிஞ்சிகுமரன் தலைமை வகித்தார். மேலூர் பேருந்து நிலையம் முன்பு தொடங்கிய ஊர்வலத்தில் பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை தமிழக அரசு உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் எந்தவித நிபந்தனையும் இன்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர்.
மேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து செக்கடி பஜார் வழியாக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் நோக்கி விவசாயிகள் ஊர்வலமாக சென்றனர்.
இதனை தொடர்ந்து பேசிய விவசாயிகள்,
அமைச்சர் வாடி, வாடி சீடி என்று பாட்டு பாடினால் மட்டும் போதாது. மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என விமர்சித்தனர்.
மேலும், 25 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் மேலூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் சட்டமன்ற உறுப்பினரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான விஸ்வநாதன் செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
Hindusthan Samachar / GOKILA arumugam