Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.)
விருதுநகரைச் சேர்ந்த த.வெ.க. அமைச்சர் ஜெகதீஸ்வரி இன்று அதிகாலை சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்பதற்காக அரசு வாகனத்தில் சென்னைக்கு வந்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து எஸ்கார்ட் வாகனமும், அமைச்சரின் சொந்த வாகனமான TN 84 AZ 5941 என்ற பதிவு எண் கொண்ட மாருதி எர்டிகா காரும் வந்ததாக கூறப்படுகிறது.
காட்டாங்குளத்தூர் சந்திப்பு அருகே, ஹோண்டா டியோ இருசக்கர வாகனத்தில் வந்த இறையன்பு (26) என்ற இளைஞர் மீது அமைச்சரின் சொந்த கார் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலைநகர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் சிக்கிய கார் அமைச்சர் ஜெகதீஸ்வரி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P