Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே நிறுத்தப்பட்டிருந்த இரவு நேர மின்சார ரயில் சேவை இன்று முதல் மீண்டும் வழக்கம் போல் இயக்கப்படுகிறது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.842 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணிக்காக கர்டர் பொருத்தும் வேலைகள் நடந்ததால், பாதுகாப்பு கருதி இரவு நேர மின்சார ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது.
கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் நேற்று வரை, இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.15 மணி வரை கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டிருந்தன. இதனால் இரவு நேர பணிக்கு செல்வோர் மற்றும் நீண்ட தூர ரயில்களில் இருந்து வந்து புறநகர் ரயில்களுக்கு மாறும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில் நடைமேம்பால பணிகளுக்காக அறிவிக்கப்பட்ட காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று முதல் இரவு நேர ரயில்கள் அனைத்தும் வழக்கமான நேர அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் புறநகர் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b