Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை புழல் கொல்கத்தா டீஸர் நெடுஞ்சாலையில் பூமிக்கு அடியில் செல்லும் ராட்சச குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 15அடி அகலத்திற்கும் 25 அடி ஆழத்திற்கும் ராட்சச பள்ளம் ஏற்பட்டது.
இப்பள்ளதால் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை சாலை உள்ளே சென்றது மேலும் பரபரப்பான சாலையில் திடீரென ஏற்பட்ட ராட்சச பள்ளத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை ஆனது எப்பொழுதும் பரபரப்பாக ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகனங்களும் செல்வது வழக்கம் தற்பொழுது கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள ராட்சச பள்ளத்தால் செங்குன்றம் மாதவரம் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இன்று திங்கள்கிழமை பள்ளி கல்லூரிக்கு செல்கின்ற மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்கின்றவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்
குறிப்பாக புழல் சைக்கிள் ஷாப் பகுதியில் ஏற்பட்டுள்ள ராட்சச பள்ளத்தால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது
Hindusthan Samachar / GOKILA arumugam