Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், பெருநகர சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர் மற்றும் மணலி மண்டலங்களின் பொறுப்பாளருமான அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர் (மண்டலம்–1) மற்றும் மணலி (மண்டலம்–2) பகுதிகளில் மழை பெய்யும் போது ஏற்படக்கூடிய பாதிப்புகள், தண்ணீர் தேங்கும் பகுதிகள், பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய இடையூறுகள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
மழையின் தாக்கம் அதிகரிக்கும் சூழலில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மாநகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளில் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்வது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் முன்னுரிமை அடிப்படையில் துரிதமாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P