சபாநாயகரின் செயல்பாடு அதிர்ச்சி அளிக்கிறது - தமிமுன் அன்சாரி கடும் விமர்சனம்
சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.) இன்றைய தமிழக சட்டப்பேரவையில் முதல்வரின் பதிலுரையை தொடர்ந்து தங்களை பேச அனுமதிக்காத சபாநாயகரை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனை தொடர்ந்து வெளிநடப்பு செய்த மனிதநேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. தமி
Thamimun Ansari's scathing criticism.


சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.)

இன்றைய தமிழக சட்டப்பேரவையில் முதல்வரின் பதிலுரையை தொடர்ந்து தங்களை பேச அனுமதிக்காத சபாநாயகரை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதனை தொடர்ந்து வெளிநடப்பு செய்த மனிதநேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி, பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து ஆளுங்கட்சியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்.

நேற்றுக்கூட சென்னையில் தவெகவைச் சேர்ந்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இப்படிப்பட்ட அசாதாரண சூழலில் தலைநகர் உள்ளது. காவல்துறை மானியக் கோரிக்கையில் முதலமைச்சர் விஜய் 53 நிமிடங்கள் உரையாற்றியுள்ளார். முன்னாள் முதலமைச்சர்களை குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்போது, அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துவது நியாயமானது என்றார்.

முதலமைச்சரே திமுக-வினரை பேச அனுமதிக்குமாறு பரிந்துரைத்த பின் சபாநாயகர் இப்படி செய்யலாமா?.

சபாநாயகர் இன்று நடந்துக் கொண்ட விதம் உண்மையில் அதிர்ச்சி அளிக்கிறது. இது ஏற்கத்தக்கதல்ல. சபாநாயகருக்கு இவ்வளவு கோபம் வரலாமா?

என்று தமிமுன் அன்சாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b