Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா, 07 செப்டம்பர் (ஹி.ச.)
புதுடெல்லியில் உள்ள சத்யா நிகேதன் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ள நிலையில், மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இடிபாடுகளை அகற்றி, சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.
நள்ளிரவில் நடைபெற்ற தேடுதல் பணியின் போது மேலும் ஒரு உடல் மீட்கப்பட்டதை அடுத்து, பலி எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது.
தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத் துறை, டெல்லி காவல்துறை மற்றும் பிற அமைப்புகள் சம்பவ இடத்தில் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.
டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த இடிபாடு தளத்தை டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா நேற்று நேரில் பார்வையிட்டார்.
அப்போதும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுக்கள் ஈடுபட்டிருந்தன.
இந்த சம்பவம், பணம் கொடுத்து தங்கும் விடுதிகளாக பயன்படுத்தப்படும் கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் தலைநகரின் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் கட்டுமான மற்றும் தீ பாதுகாப்பு விதிமுறைகள் அமல்படுத்தப்படுவது குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மேற்கு வங்க அமைச்சர் திலீப் கோஷ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
புதுடெல்லியில் விடுதி ஒன்று இடிந்து விழுந்தது. மாணவர்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இப்படிப்பட்ட கட்டிடத்தை கட்டியது யார்? அதில் மாணவர்கள் ஏன் வசித்து வந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இது மிகவும் கவலைக்குரிய விஷயம். அரசு இது குறித்து முழுமையான விசாரணை நடத்தும் என்று நம்புகிறேன்
என்று அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b