Enter your Email Address to subscribe to our newsletters

துபாய் , 07 செப்டம்பர் (ஹி.ச.)
பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, இலங்கை வீராங்கனைகளின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.
20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணியில் ஷ்ஹானா மொஸ்டிரி அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார்.
இலங்கை தரப்பில் சமுதி பிரபோதா சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி பேட்டிங் செய்ய களம் இறங்குகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வரும் பெண்கள் ஆசிய கோப்பை டி20 தொடர் கடந்த 28-ந்தேதி தொடங்கியது.
இதில் 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் அணிகளும்,
குரூப் பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா அணிகளும் இடம்பெற்றுள்ளன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA