Enter your Email Address to subscribe to our newsletters

திருமலை , 08 செப்டம்பர் (ஹி.ச.)
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று மாலை சுவாமி தரிசனம் செய்தார்.
வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக கோயிலுக்குள் சென்ற அவர், ஏழுமலையானை தரிசித்தார். தொடர்ந்து ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் அவருக்கு வேத ஆசீர்வாதம் வழங்கினர்.
பின்னர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சௌத்ரி, முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு சுவாமியின் தீர்த்தப் பிரசாதங்களை வழங்கினார்.
அப்போது பேசிய யோகி ஆதித்யநாத், மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியை பிரார்த்தித்து, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு சுவாமியின் அருள் கிடைக்க வேண்டுமென வேண்டிக் கொண்டதாக தெரிவித்தார்.
திருமலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்டு வரும் சிறப்பான கியூ வரிசை நிர்வாகம், தூய்மை மற்றும் ஆன்மிக சூழலை பாதுகாத்து வருவதையும் அவர் பாராட்டினார்.
மேலும், புனர்வசு நட்சத்திரத்தை முன்னிட்டு கோயிலில் எழுந்தருளியிருந்த சீதா, லட்சுமண சமேத ஸ்ரீ ராமச்சந்திர சுவாமியையும் யோகி ஆதித்யநாத் தரிசனம் செய்தார்.
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஜகத்குரு ஸ்ரீ ராமானுஜாச்சாரியார் திருமலையில் ஏற்படுத்திய வழிமுறையின் ஒரு பகுதியாக, வெங்கடேஸ்வர சுவாமியுடன் ஸ்ரீ ராமரின் திவ்ய ரூபத்தையும் இன்று தரிசிப்பது மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA