மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் - அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் பெறுதல் தொடக்கம்
சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.) மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகளிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறும் பணி இன்று தொடங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச
By-election


சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.)

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகளிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறும் பணி இன்று தொடங்கியுள்ளது.

இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில், மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதையடுத்து, அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்பும் கட்சி உடன்பிறப்புகள் செப்டம்பர் 8 முதல் 10-ஆம் தேதி வரை விருப்ப மனுக்களைப் பெற்று சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்கள் வழங்கப்படும். மனுவில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, செப்டம்பர் 10-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 16-ஆம் தேதி நிறைவடைகிறது.

செப்டம்பர் 17-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட உள்ள நிலையில், செப்டம்பர் 19-ஆம் தேதி மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளாகும்.

அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN