காரில் மோதி காயமடைந்த சிறுத்தை – மீட்புப் பணியின்போது வனத்துறை அதிகாரி மீது தாக்குதல்
கர்நாடகா, 08 செப்டம்பர் (ஹி.ச.) கர்நாடக மாநிலம் தாவணகெரே பகுதியில் நெடுஞ்சாலையில் சென்ற கார் மீது சிறுத்தை மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென குறுக்கே வந்த சிறுத்தை மீது கார் மோதியதாக கூற
Cheetah


கர்நாடகா, 08 செப்டம்பர் (ஹி.ச.)

கர்நாடக மாநிலம் தாவணகெரே பகுதியில் நெடுஞ்சாலையில் சென்ற கார் மீது சிறுத்தை மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென குறுக்கே வந்த சிறுத்தை மீது கார் மோதியதாக கூறப்படுகிறது. இதில் சிறுத்தைக்கு காயம் ஏற்பட்டதுடன், சாலையோரத்தில் காயமடைந்த நிலையில் அது கிடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காயமடைந்த சிறுத்தையை பத்திரமாக மீட்டு சிகிச்சை அளிப்பதற்காக, அதனை மயக்க மருந்து செலுத்தி கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

மயக்க மருந்து செலுத்தப்பட்ட சிறுத்தை முழுமையாக மயக்கநிலைக்கு செல்வதற்கு முன்பாக, திடீரென ஆக்ரோஷமடைந்து அருகில் இருந்த வனத்துறை அதிகாரி ஒருவரை தாக்கியது. எதிர்பாராத விதமாக நடந்த இந்த தாக்குதலில் அந்த அதிகாரிக்கு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த மற்ற வனத்துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சிறுத்தையை பாதுகாப்பான முறையில் கட்டுப்படுத்தினர். பின்னர் சிறுத்தை வெற்றிகரமாக மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

சாலை விபத்தில் காயமடைந்த சிறுத்தைக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சிறுத்தையின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P