Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 08 செப்டம்பர் (ஹி.ச.)
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று இலங்கைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
இந்தியா-இலங்கை இடையேயான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த பயணம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு, பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
குறிப்பாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெறும் என தெரிகிறது.
மேலும், பாதுகாப்புத் தளவாடங்கள் தயாரிப்பில் கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும், ஏற்கனவே உள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்களை பயன்படுத்திக் கொள்வது குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் பாதுகாப்பு கட்டமைப்பை நவீனப்படுத்துவதில் இந்தியாவின் பங்களிப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வாய்ப்புள்ளது.
பயணத்தின் ஒரு பகுதியாக இலங்கை அதிபர், பிரதமர் மற்றும் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேச உள்ளார்.
இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையேயான நீண்டகால நட்புறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b