பெருந்துறை தொகுதி தேர்தல் வழக்கு தள்ளுபடி - அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமாருக்கு சாதகமாக நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.) பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த தோப்பு வெங்கடாசலம் என்பவர், அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமாரின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொ
Election petition regarding Perundurai constituency dismissed


சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.)

பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த தோப்பு வெங்கடாசலம் என்பவர், அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமாரின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்கக்கூடாது எனக் கோரி எம்எல்ஏ ஜெயக்குமார் தரப்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தோப்பு வெங்கடாசலம் தாக்கல் செய்த தேர்தல் வழக்கில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட சட்டப்பூர்வமான காரணங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டியது. வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு உகந்ததாக இல்லை எனக் கருதிய நீதிமன்றம், ஜெயக்குமார் தரப்பு மனுவை ஏற்று, தேர்தல் வழக்கை முழுமையாக நிராகரித்து உத்தரவிட்டது.

முன்னதாக இந்த தேர்தல் வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தினாலேயே, பெருந்துறை உள்ளிட்ட ராஜினாமா செய்யப்பட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், அந்த தடையை நீக்குவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b